கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு மேலும் நால்வர் நியமனம்

🕔 August 27, 2020

கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடன் புதிதாக 04 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்கர் வென்டருவே உபாலி தேரர், அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர், மல்வத்து பீடத்தின் பதிவாளர் கலாநிதி பஹமுனே சுமங்கல தேரர் மற்றும் அம்பன்வெல்லே ஶ்ரீ சுமங்கல தேரர் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

மேற்படி செயலணியில் தமிழர், முஸ்லிம்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments