
புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
களனி ரஜமஹா விகாரையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இம்முறை தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளை பெற்று வெற்றியீட்டினார்.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பெறப்பட்ட அதிகூடிய விருப்பு வாக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




