ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்: முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்கு ‘கல்தா’

🕔 August 8, 2020

க்கிய மக்கள் சக்தி, அதன் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவித்துள்ளது.

அதற்கிணங்க, அந்தக் கட்சிக்குக் கிடைத்த 07 தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைகளில் – முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனையோர் அனைவரும் சிங்களவர்களாவர்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளில் தலா ஒவ்வொன்றினை – அதன் பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு வழங்கும் என செய்திகள் வெளியாகியியிருந்த போதும், அவ்வாறு எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேர்தலில் தோல்வியடைந்த முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் எனும் கோஷங்கள் எழுந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments