நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு; சுமூகமாக நடைபெறுகிறது

🕔 August 5, 2020

– முன்ஸிப் அஹமட் –

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று புதன்கிழமை காலை 7.00 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இம்முறை கொரோனா அச்ச சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாக்களிப்பு நடைபெறுவதால், சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

வாக்களிக்கச் செல்வோர் மாஸ்க் அணிந்து செல்லுதல், வாக்களிப்பு நிலைய வளாகத்தினுள் கைகளைக் கழுவுதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அதேவேளை வாக்களிப்பு நிலையத்தினுள் நுழையும் வாக்காளர்களின் கைகளைத் தொற்று நீக்கம் செய்யும் வகையில் ‘சானிடைசர்’ வழங்கப்படுகிறது.

இம்முறை 196 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில், 7452 பேர் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

01 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுளள்ளார்கள்.

மிகவும் சுமூகமான முறையில் வாக்களிப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 07 மணி முதல் மாலை 05 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்