தேர்தலை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்: சஜித் பிரேமதாஸ கோரிக்கை

🕔 July 13, 2020

தேர்தலை உடனடியாக அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை பற்றிய அனைத்து தகவல்களையும் அரசாங்கம் மட்டுமே வௌயிடுகிறது எனக் கூறிய அவர்; இந்த தகவல்களின் உண்மை தன்மை தொடர்பில் பாரிய சிக்கல் இருப்பதாகவும் கூறினார்.

தன்னுடைய தலைமையிலான குழுவினர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று; “இது தேர்தல் நடத்துவதற்கு சிறந்த காலம் இல்லை” என கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments