தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் சரணடைந்தார்

🕔 July 7, 2020

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பரிசோதகர் சமன் வசந்த குமார, கடவத்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

வெலிவேரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் இவருக்கும் தொடர்புள்ளதாக குற்றச் சாட்டப்பட்ட நிலையில், இவர் தலைமறைவாகி இருந்தார்.

எனவே, இவர் பற்றிய தகவலை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியிருந்தனர்.

இந்த நிலையிலேயே, குறித்த பொலிஸ் பரிசோதகர் சரணடைந்துள்ளார்.

இவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

Comments