பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

🕔 July 7, 2020

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்காக தற்போது நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

குறித்த பொலிஸ் பரிசோதகர் வெலிவேரிய பகுதியை சேர்ந்த வெஹெரவத்த சமன் வசந்த குமார எனும் 49 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது.

இந்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகவல் வழங்கும் நபர்களின் ரகசிய தன்மை பேணப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

071 859 17 67 / 0112 42 21 76 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி தொடர்பில் அறிவிக்கலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்