ரவி உள்ளிட்டோரைக் கைது செய்ய இடைக்காலத் தடை

🕔 July 7, 2020

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க  உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிணைமுறி வழக்கு தொடர்பில்  ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், அதனை  நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு ரவி தரப்பினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதனை பரீசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், சம்பந்தப்பட்டோரக் கைது செய்வதற்கு இன்று செவ்வாய்கிழமை இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்