வடக்கு, கிழக்கில் 20 ஆயிரம் உளவாளிகள் நடமாடுகின்றனர்: மாவை சேனாதி ராஜா தகவல்

🕔 June 25, 2020

டக்கு, கிழக்கு மாகாணங்களில் 20,000 உளவாளிகள் நடமாடுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு பூரணமான ராணுவ ஆட்சியொன்றை ஜனநாயகத்தின் மூலம் பெற்றதாகக் கூறி நாட்டில் நிறுவினாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றும் மாவை சேனாதிராஜா இதன்போது தெரிவித்தார்.

Comments