மூவாயிரம் ராணுவத்தினரைக் கொன்ற கதை: விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவு

🕔 June 22, 2020

ருணா அம்மான் எனப்படுகின்ற முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் வெளியிட்ட தகவல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் முன்னாள் பிரதி அமைச்சர்; ஆணையிரவில் ஒரே இரவில் 3000 ராணுவத்தினரை தாம் கொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்ட இந்த தகவல் தொடர்பில் அரசியல் மட்டத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கருணா வெளியிட்ட தகவல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Comments