மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை நடத்துமாறு கோரிக்கை

🕔 June 19, 2020

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் மோசடி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில், இலங்கை அணி பணத்துக்காக வெற்றி வாய்ப்பை விட்டுக் கொடுத்ததாக அப்போதைய விளையாட்டுதுறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு  விளையாட்டுத்துறை அமைச்சின்  செயலாளர் – உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்பான செய்தி: 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

Comments