மீரியபெத்த: உறவுகளுக்கு அஞ்சலி
🕔 October 29, 2015
– க. கிஷாந்தன் –
பதுளை – கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட மண்சரிவு பேரவலத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக, இன்று வியாழக்கிழமை மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தில் ஒன்றுகூடிய உறவுகள் மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த அஞ்சலி நிகழ்வில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் பாடசாலை மாணவர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.