அம்பாறையில் மு.காங்கிரஸ் 06 வேட்பாளர்களைக் களமிறக்கியமை எனக்கே அதிகம் சவாலானது: பைசல் காசிம் தெரிவிப்பு

🕔 June 1, 2020

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலே அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைத்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், தான் உள்ளடங்கலாக 06 வேட்பாளர்களை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகக் களமிறக்கியமையானது – தனக்கே அதிகம் சவாலான நிலையைத் தோற்றுவித்திருப்பதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்திருக்கிறார்.

‘புதிது’ செய்தித்தளத்தின் ‘சொல்லதிகாரம்’ நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர் மப்றூக் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்ட கருத்தை முன்னாளர் ராஜாங்க அமைச்சர் கூறினார்.

அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் சார்பான மற்றொரு வேட்பாளரும் தேசியப்பட்டியல் முன்னாள் நாடாளுமன் உறுப்பினருமான ஏ.எல்.எம். நஸீர் – மிகவும் வெளிப்படையாக, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிமுக்கு எதிரான ‘வெட்டுக் குத்து’ அரசியலில் ஈடுபடுகின்றமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கும் இதன்போது அவர் பதிலளித்தார்.

‘புதிது’ வழங்கும் ‘சொல்லதிகாரம்’ நிகழ்ச்சி முழுவதையும் கீழேயுள்ள வீடியோவில் நீங்கள் காணலாம்.

வீடியோ

Comments