வெளியில் வந்தார் ரஞ்சன்; நுகேகொட நீதிமன்றம் பிணை வழங்கியது

🕔 April 20, 2020

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நுகேகொட நீதிவான் நீதிமன்றம் – பிணையில் விடுவிக்கும் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

இதேவேளை, தான் பிணையில் வெளிவந்தமை தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்க பேஸ்புக் இல் பதிவொன்றினையும் இட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளிற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தொடர்பான செய்தி: ரஞ்சனுக்கு விளக்க மறியல்: 20ஆம் திகதி வரை ‘உள்ளே’ வைக்க உத்தரவு

Comments