கொரோனா தொற்று காரணமாக 03ஆவது நபர் மரணம்

🕔 April 1, 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்று புதன்கிழமை ஒருவர் இறந்துள்ளார்.

கொரோனாவினால் நாட்டில் ஏற்பட்ட மூன்றாவது மரணம் இதுவாகும்.

இறந்தவர் மருதானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவராவார்.

நாட்டில் மொத்தமாக 146 பேர் கொரோனா தொற்று காரணமாக (இன்று இரவு 7.00 மணி வரை) பாதிக்கப்பட்டனர்.

இவர்களில் 21 பேர் சுகமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

Comments