ஊரடங்குச் சட்டத்தை மீறிய 338 பேர் கைது; சட்டத்தைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

🕔 March 22, 2020

ரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இன்று காலை 09 மணி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டு மைதானங்களில் இருத்தல், போதைபொருள் பாவித்தல் மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், குடிமக்கள் அனைவரும் சட்டத்தை மதித்தும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

“இந்த பெரும் நெருக்கடியை வெற்றிகொண்டு, ஒரு நாடாக நாம் மீண்டெழ முடியும் என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்” எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments