
– அஸ்ரப் ஏ. சமத் –
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அரசியல் விவகாரங்களுக்கான விஷேட பிரதிநிதி மிரோலாவே ஜெனேஹா மற்றும் மு.கா. தலைவரும், நகர அபிவிருத்தி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில், நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.
அமைச்சர் ரஊப் ஹக்கீமின் நகர திட்டமிடல் அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில், ஐக்கிய நாடுகள் சபையின் பதில் தலைமை அதிகாரி சின் உமேஷ், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் புனர்வாழ்வு, அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
