புகை பிடித்தல், கொரோனா தொற்றை தீவிரப்படுத்தும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

🕔 March 20, 2020

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலுக்கான பிரதான காரணமாக அமைவது புகைப்பிடித்தல் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் வைத்திய ஹரித அலுத்கே இதனைக் கூறினார்.

இந்த நிலைமை தொடர்பில் தொடர்ந்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தி வந்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

தற்போது காணப்படும் சட்டம் போதுமானதாக இல்லையென்றால் புதிதாக சட்டமொன்றை இயற்றியாவது நாட்டினுள் அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என தெரிவித்த அவர்; வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இதனை சட்டமாக்குமாறும் வலியுறுத்தினார்.

இதேவேளை, வைரஸ் பரவுவதில் புகைபிடித்தல் நேரடி தாக்கத்தை ஏற்படுவத்துவதாக தெரிவித்த அவர், சிகரெட் விற்பனை மிகவும் அவதானத்திற்கு உட்பட்டது என தெரிவித்தார்.

புகைக்கும் நபர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சதவீதம் மிகவும் அதிகம் என தெரிவித்த வைத்தியர் ஹரித அலுத்கே; உயிரை நேசிப்பவர்களாயின் உடனடியாக புகைப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்