மு.கா. தலைவருக்கு ஹரீஸ் கல்வீசி தாக்கினார்: ‘சொல்லதிகாரம்’ நேர்காணலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் தெரிவிப்பு

🕔 March 14, 2020

ம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் கடந்த முறை முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியடைந்தமை, அந்த ஊரின் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வகையில் தனக்கு பெரும் அவமானம் என்று, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அப்போது அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஐ.எல்.எம். மாஹிர்தான் அந்தத் தோல்விக்குக் காரணமாக இருந்ததாகவும், இதன்போது மன்சூர் குற்றம் சுமத்தினார்.

‘புதிது’ செய்தித்தளத்தின் ‘சொல்லதிகாரம்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவற்றினைக் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸும் அவரின் ஆதரவாளர்களும் ஒரு தடவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதாகவும், ஹரீஸை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று கூறிய மு.கா. தலைவர், மீண்டும் சேர்த்துக் கொண்டதாகவும் அந்த நேர்காணலில் மன்சூர் தெரிவித்தார்.

நேர்காணலை நடத்திய ஊடகவியலாளர் மப்றூக் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே, இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

சம்மாந்துறையைச் சேர்ந்தவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவருமான எஸ்.எம்.எம். இஸ்மாயில்; கடந்த ஆட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் போது, பணம் பெற்றுக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் இதன்போது குற்றச்சாட்டு ஒன்றினை மன்சூர் முன்வைத்தார்.

அவர் வழங்கிய முழுமையான வீடியோ நேர்காணலை கீழே காணலாம்

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்