பொதுத் தேர்தல்: ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

🕔 March 7, 2020

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரம்ழான் மொஹமட் இம்ரான் மற்றும் அசனார் மொஹமட் அஸ்மி ஆகியோர் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அந்த வகையில் 09 சுயேட்சைக் குழுக்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே இந்தச் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.

வன்னி மாவட்டத்தில் நாமல் லியனபத்திரண, நீல் சாந்த, எம்.பி.நடராஜா ஆகியோர் சுயேட்சைக் குழுக்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மயில்வாகனம் விமல்தாஸ், ஐங்கரநேசன் பொன்னுதுறை, விக்டர் அன்டனி வில்லியம்ஸ் ஆகியோர் தலைமையிலான மூன்று சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் உடவத்தகே மஹிந்த சில்வா என்பரின் தலைமையில் சுயேட்சைக் குழு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

நபரொருவருக்கு 2000 ரூபா வீதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியிடுகின்றவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டுப் பணம் செலுத்தப்படுதல் வேண்டும்.

Comments