எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க 01 கோடி 62 லட்சம் பேர் தகுதி

🕔 January 16, 2020

திர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் ஒரு கோடி 62 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் டாப்பு தயாரிப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

இதேவேளை, 2020ஆம் ஆண்டிற்குரிய புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments