புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர், முதல் தடவையாக நியமனம்
அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஸ் சலே நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும்.
இதேவேளை ராணுவ ஊடக பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து ராணுவ தலைமையகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.