ஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல்

🕔 October 21, 2015

Problem - 01
லங்கை பதிவாளர் சேவை வகுப்பு 111 தரம் 11க்கான திறந்த பரீட்சையும், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் சமூக சேவை உத்தியோகத்தர் தரம் 11க்கான போட்டிபரீட்சையும் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஒரே தினத்தில் நடைபெறவுள்ளதால், இரண்டு பரீட்சைகளுக்குமாக விண்ணப்பித்தவர்கள் இது தொடர்பில் பாரிய சிக்கல்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவதுளூ

இலங்கை பதிவாளர் சேவை வகுப்பு 111 தரம் 11க்கான திறந்த பரீட்சை, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான அட்டவணை கடந்த மாதம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இதேவேளை, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால், சமூக சேவை உத்தியோகத்தர் தரம் 11க்கான போட்டிப் பரீட்சை அனுமதி அட்டைகளும், விண்ணப்பதாரிகளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி இரண்டு போட்டிப் பரீட்சைகளும், ஒரே தகைமையைக் கொண்ட பட்டதாரிகளுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், இரண்டு பரீட்சைகளுக்கும் ஒரே தடவையில் பல நூற்றுக் கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு பரீட்சைகளும் இம்மாதம் 31ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகி உள்ளமையினால், எந்த பரீட்சையை எழுதுவது என்று முடிவெடுக்க முடியாத நிலையில், இரண்டு பரீட்சைக்காகவும் விண்ணப்பித்த பட்டதாரிகள் உள்ளனர்.

இதன் காரணமாக, தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு, பட்டதாரிகளுக்குக் கிடைக்கும் இவ்வாறான ஒரு சில வாய்ப்புகளும் இல்லாமல் போய்விடக் கூடிய நிலைவரம் உருவாகியுள்ளது.

மேற்படி பரீட்சைகளில், இலங்கை பதிவாளர் சேவை வகுப்பு 111 தரம் 11க்கான திறந்த பரீட்சையானது, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால், நாடளாவிய ரீதியில் நடாத்தப்படவுள்ளமையினால், அதனைப் பிற்போடுவதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் காணப்படலாம்.

ஆனால், கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்படும், சமூக சேவை உத்தியோகத்தர் தரம் 11க்கான பரீட்சையானது, கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் உரித்தானதாகும்.

எனவே, கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர், இது தொடர்பில் கரிசனை கொண்டு, அந்தப் பரீட்சையினைப் பிற்போட ஏற்பாடு செய்வாராயின், வேலையற்ற பட்டதாரிகள் நன்மை அடைவர் என, இரண்டு பரீட்சைகளுக்காகவும் விண்ணப்பித்தோர் கூறுகின்றனர்Exam - 03Exam - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்