வாக்குச் சீட்டை படமெடுத்த பாடசாலை காவலாளி கைது

🕔 November 2, 2019

பால்  மூல வாக்குபதிவு செய்த  பின்னர்  அந்த  வாக்கு  சீட்டை தனது  கைத் தொலைபேசியில் படம் எடுத்தார் எனும் குற்றச்சாட்டில், கம்பளை –  குருந்துவத்த  பகுதியை  சேர்ந்த  பாடசாலையொன்றின்  காவலாளி  நேற்று வெள்ளிக்கிழமை கைது  செய்யப்பட்டார்.

இதன் பின்னர் கம்பளை நீதவான்  நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நேற்றும், நேற்று முன்தினமும் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இது வரையில்  36  முறைப்பாடுகளும், தேர்தல் சட்டத்தை  மீறியமை  தொடர்பில்   50 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இந்த  முறைப்பாடுகள் தொடர்பில்  38  பேர் வரையில்  கைது  செய்யப்பட்டுள்ளனர்.  பிரதேச  சபை உறுப்பினர், பிரதேச சபை    உப தலைவர், முன்னாள் பிரதேச  சபை  உறுப்பினர், பொலிஸ்  உத்தியேகஸ்தர் உள்ளிட்ட  38 பேரே  இவ்வாறு  கைது  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்