நீதிமன்றம் செல்வேன்; மஹிந்த

🕔 October 17, 2015

Mahinda - 053னாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆணைக்குழுவினர், தனது தரப்பு சட்டத்தரணிகளின் ஆட்சேபணைகளை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொண்டுள்ளகின்றமை காரணமாகவே, தான் நீதிமன்றம் செல்வதற்கு எதிர்பார்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் மஹிந்த ராஜபக்ச நேற்று ஆஜராகியிருந்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது, பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதனூடாகவே பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தான் வேட்பாளர் என்பதனால் இதில் தனக்கு தொடர்பில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சியொன்றில் விளம்பரங்களை வெளியிட்டமைக்காக, கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே, இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்