வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

🕔 October 16, 2015

Demonstrating hands - 02டக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள், ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.10.2015) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து, அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாடுமுழுவதிலும் நடத்துவதற்கு அழைப்பு மேற்படி அழைப்பு விடுக்கப்படுகிறது.

புலிகளால் ஆயுத முணையில் விரட்டியடிக்கப்பட்டது முதல் இன்றுவரை 25 வருட காலமாக, மேற்படி முஸ்லிம் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் நிறைவடைந்து வடக்கில் தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டனர். சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்திய அரசாங்கம், முஸ்லிம்கள் மீது கரிசனை காட்டவில்லை. அரசாங்கத்திலிருந்த அமைச்சர்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில், நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த புதிய அரசாங்கத்திலும் முஸ்லிம் தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர். எனினும் இவர்கள் இதுவரை முஸ்லிம்களின் மீள்குடியேற்றதை சாத்தியப்படுத்துவதற்கு எவ்வித காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது கவலையளிக்கின்றது.

எனவே, மக்கள் ஒன்றிணைந்து – ஜனநாயக முறையில் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுத்து, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்துக்காக குரல் கொடுப்போம். இது காலத்தின் தேவையாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்