கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை, பொத்துவில் பிரதேச சபை ஆரம்பித்தது
– நூர்தீன் பௌசர் –
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டத்துக்கிணங்க, கிராமத்தினை சுத்திகரிக்கும் நடவடிக்கையினை இன்று வியாழக்கிழமை, பொத்துவில் பிரதேசசபை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.
பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் எம்.சி. ஹபிபுர்ரஹ்மான் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, பஸ்தரிப்பு நிலையங்கள், பாதைகள் மற்றும் வடிகான்கள் உள்ளிட்ட இடங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேசசெயலக செயலாளர் என்.எம்.எம். முஷர்ரத், முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித், வைத்தியசாலை அதிகாரி ஏ. எம். இஸ்ஸடீன், பொதுச்சுகாதார பரிசோதகர் எம். எஸ். எம். மலீக், சுகாதார வைத்திய அதிகாரி எம் .எம்.சமீம், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். றபீக் உட்பட, பிரதேச சபை பணியாளர் பலரும் கலந்துகொண்டனர்.