ஞானசார தேரருக்கு ஜனதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல்
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், சிறையிலிருந்து விடுதலை செய்தமைக்கு எதிராக, அடிப்படை உரிமை வழக்குகள் இரண்டு, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த வழக்குகளில் ஜனாதிபதிக்கு பதிலாக, சட்டமா அதிபர் பெயர் குறிக்கப்பட்டுள்ளார்.
கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இந்த வழக்குகளில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். மற்றைய வழக்கை, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக விதிக்கப்பட்ட 06 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த நிலையில், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.