றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலிக்கு எதிராக 21 முறைப்பாடுகள்: நிறைவடைந்தது காலக்கெடு

🕔 June 12, 2019

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி, ஹிஸ்புல்லாஹா ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்ய, பொலிஸ் தலைமையகம் வழங்கியிருந்த கால அவகாசம் இன்று புதன்கிழமை மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

குறித்த மூவருக்கும் எதிராக, இன்று புதன்கிழமை 3.00 மணி வரை, 21 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவற்றில் றிசாட் பதியுதீனுக்கு எதிராக மட்டும் 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ​ முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்