கிழக்கு, மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா

🕔 June 3, 2019

கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

கிழக்கி மாகாண ஆளுநர் எம்.எல்.எஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் தமது ராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களின் ராஜிநாமாகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரின் பதவிகளை பறிக்குமாறு கோரி, அத்துரலியே ரத்ன தேரர் வெள்ளிக்கிழமை முதல் உண்ணா விரதம் இருந்து வரும் நிலையில், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி ஆகியோர் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்