சஹ்ரான் கும்பல் தொடர்பு கொண்ட 1800 தொலைபேசி இலங்கங்கள் தொடர்பில் விசாரணை

🕔 May 30, 2019

யங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஈஸ்டர் தினத் தாக்குதல்தாரிகள், வேறு நபர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் படி, இந்த இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

சஹ்ரான் தலைமையிலான கும்பலொன்று ஈஸ்டர் தினத் தாக்குதலை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்