நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: சாரதி பலி

🕔 May 11, 2019

த்தளையில் கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

வத்தளை – ஹணுபிட்டிய பகுதியில் நேற்றிரவு கடற்படையினரால் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காரை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை விடுத்த போதிலும், காரை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, சந்தேகத்திற்கிடமாக காரை நோக்கி கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் காரின் ஓட்டுநர், 34 வயதான ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கிரிபத்கொடை பகுதியிலுள்ள கடற்படையினர் மேற்கொண்ட  துப்பாக்கி பிரயோகத்தில் காரின் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் உத்தரவை மீறி பயணித்தமையே இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட காரணம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்