எனது சகோதரர்கள் யாரும் கைதாகவில்லை; பொய் செய்திக்கு, அமைச்சர் றிசாட் பதில்

🕔 April 26, 2019

ன்னுடைய சகோதரர் எவரும் கைது செய்யப்படவோ, பாதுகாப்பு படையினரின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவோ இல்லை என்று,  அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன் தெரிவி்த்தார்.

அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் ஒருவரை படையினர் கைது செய்ததாகவும், அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டதாகவும், மேற்படி ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.
இந்த நிலையிலேயே, அமைச்சர் றிசாட் பதியுதீன், மேற்படி செய்தியை ஊடகங்களிடம் மறுத்துள்ளார்.
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அவர் இருவரும் அமைச்சருக்கு இளையவர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்