04 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்ற விமானப்படை உத்தியோகத்தருக்கு, 20 லட்சம் ரூபா ஜனாதிபதி நிதியுதவி
🕔 April 9, 2019
நான்கு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த விமானப் படை உத்தியோகத்தரான அயேஷா தில்ஹானி எனும் பெண் ஒருவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 20 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்துக்கு இன்று செவ்வாய்கிழமை தன்னுடைய கணவர், தாய் மற்றும் குழந்தைகளுடன் சென்றிருந்த மேற்படி பெண், ஜனாதிபதியைச் சந்தித்து மேற்படி நிதியுதவியைப் பெற்றுக் கொண்டார்.
அயேஷா தில்ஹானி எனும் மேற்படி பெண்ணுக்கு – முதல் பிரசவத்திலேயே ஒரே தடவையில் 04 குழந்தைகள் பிறந்துள்ளன. இவற்றில் இரு குழந்தைகள் பெண்கள், இருவர் ஆண்களாவர்.
தனது குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்காக மேற்படி தயார், ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ எனும் சேவைக்கு அழைப்பினை ஏற்படுத்தி உதவி கோரியமைக்கு அமைவாகவே, இந்த நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.