கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி

🕔 October 2, 2015

Ganja plant - 01ஞ்சா செடிகளை – நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு, முதன் முறையாக உருகுவே நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு 02 தொன் அளவுக்கு கஞ்சா வளர்க்க அனுமதிக்கப்படுவார்கள் என, தேசிய மருந்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த கஞ்சாத் தோட்டங்களுக்கு அரசாங்கமே பாதுகாப்பளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உருகுவே நாடுதான் உலகிலேயே முதன் முறையாக கஞ்சா தயாரிப்பதை 2013ஆம் ஆண்டில் சட்டபூர்வமாக்கியது.

தற்போதுவரை, ஒவ்வொரு வீட்டிலும் ஆறு கஞ்சா செடிகள் வரை வளர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

Comments