இலங்கைக் கடலில் 100 கிலோ ஹேரோயினுடன் ஈரானியர்கள் கைது
இலங்கையின் தென் கடற்பகுதியல் மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 09 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 100 கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார்.
குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது, கப்பலிலிருந்து 500 கிலோகிராமுக்கும் அதிகமாக போதைப் பொருள் கடலுக்குள் கொட்டப்பட்டிருக்கலாம் என்றும் லத்தீன் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்தே இந்த போதைப் பொருள், நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதென்றும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையின் இந்த நடவடிக்கைக்கு, கடற்படையினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.