நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகெய்ன் பாவிக்கின்றனர்; விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

🕔 February 25, 2019

மைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொக்கெய்ன் போதைப் பொருள் பாவிப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று திங்கட்கிழமை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் ரஞ்சனின் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்காக, ஐக்கிய தேசிய கட்சியி சார்பில் குழுவொன்றினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்திருந்தார்.

இந்தக் குழுவின் தலைவராக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டார்.

அதனடிப்படையில் கடந்த வௌ்ளிக்கிழமை ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம், குறித்த குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை, இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குழு ஒப்படைத்துள்ளது.

அத்துடன் குறித்த அறிக்கையின் பிரதி ஒன்றினை, குற்றத்தடுப்பு பிரிவினருக்கும் வழங்கவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்