விபத்தை ஏற்படுத்திய, மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்டோருக்கு பிணை
பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மீது டிபெண்டர் வாகனத்தினால் மோதிக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நாடாளுனம்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பிணை நிபந்தனை நிறைவேற்றப்படாத காரணத்தினால், அவர்களில் ஐந்து பேரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.
எனினும் டிப்பெண்டர் வாகனத்தை செலுத்திய சாரதியை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உட்பட மேலும் ஒருவர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்பான செய்தி: பொலிஸ் பொறுப்பதிகாரி மீது, டிபன்டர் மோதிய சம்பவம்: மஹிந்தானந்த எம்.பி.யின் மகன் கைது