கிராண்பாஸில் துப்பாக்கிச் சூடு; துபாயில் கைதானவரின் மனைவி, ‘குடு சூட்டி’ படுகாயம்
கொழும்பு கிராண்பாஸ் – மெல்வத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர் துபாயில் மாகந்துர மதுஷுடன் கைதான பாதாள உலகக்குழு உறுப்பினர் பாஜியின் மனைவி ‘குடுசூட்டி’ எனக் கூறப்படுகிறது.
இன்று வியாழக்கிழமை மாலை மோட்டார் பைக்கில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மேற்படி பெண் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து மேற்படி பெண் – கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.
ஆயினும், இவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.