பிரதியமைச்சரானார் அப்துல்லா மஹ்ரூப்; தயாவின் அமைச்சில் மாற்றம்

🕔 January 11, 2019

புதிய அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள் இருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அந்த வகையில் பின்வருவோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள்

  1. ரவீந்திர சமவீர – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்
  2. வி. ராதாகிருஷ்ணன் – விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

பிரதியமைச்சர்

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதனிடையே அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்