ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தில் பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள்
ஞானசார தேரரை சுதந்திர தினமன்று பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெவதிஹட எனும் அமைப்பு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
இனம், மதம் தொடர்பில் ஞானசார தேரர் ஆற்றியுள்ள பங்களிப்பை கருத்திற்கொண்டு, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு, மேற்படி அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹன்பிட்டி அப்யராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
நாட்டுக்கு பாதகமாக கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கு பதிலாக, கல்வி ராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஞானசாரரை விடுதலை செய்யாவிட்டால் எதிர்வரும் காலங்களில் பாரிய செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தினமாகும்.