ஒக்டோபர் 26க்கு முன்னரான நிலையை ஏற்படுத்துங்கள்: றிசாட் பதியுதீன் வலியுறுத்தல்
பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதற்கு அமைவாக, ஜனாபதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.
நாட்டின் அரசியலமைப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர் அனும் அடிப்படையில் ஜனாதிபதி இதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனைக் கூறினார்.
அத்துடன், கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்ற செயற்பாடுகள் எவ்வாறு இருந்ததோ, அதேபோன்ற நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி தாமதிக்காமல், உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.