பெற்றோல், டீசல் விலைகள் நள்ளிரவு தொடக்கம் குறைகின்றன

🕔 November 15, 2018

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு சற்று முன்னர் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று நள்ளிரவு பெற்றோல் விலை குறைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதற்கிணங்கவே, தற்போது பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் தலா 5.00 ரூபாவினால் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்