கலாநிதி றியால் எழுதிய நூல் வெளியீடு; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாளை

🕔 October 17, 2018

– முன்ஸிப் அஹமட் –

தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய, ‘உளவியல் மூலக் கோட்பாடுகள்’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு, நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி எம்.எல். பௌசுல் அமீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் சிறப்பு அதிதியாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா நூல் அறிமுகத்தினையும், பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறை பேராசிரியர் பீ.எம். ஜமாஹிர் நூல் மதிப்பீட்டுரையினையும் நிகழ்தவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்