வி்ண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்தவர், பூமியை வந்தடைந்தார்
🕔 September 12, 2015



சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்த ரஷ்ய விண்வெளி வீரர் கென்னடி பதல்கா, நேற்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார். அவருடன் இரண்டு சக வீரர்களும் பூமியை வந்தடைந்தனர்.
57 வயதான கென்னடி, 05 தடவை சென்று வந்ததன் மூலம், மொத்தமான 879 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார். இதன் மூலம், விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியவர் என்ற சாதனையை கென்னடி பதல்கா நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஏற்கனவே 04 தடவை கென்னடி சென்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.கென்னடி, 05 வது முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டு அங்கு 168 நாட்கள் தங்கினார்.
இவருடன் கசகஸ்தானின் அய்டின் எயிம்பெடவ் மற்றும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆண்டிரிஸ் மோஜன்சன் ஆகியோரும் குறுகிய காலம் விண்வெளி நிலையத்தில் தங்கி விட்டு, பூமிக்கு திரும்பியுள்ளனர்.
கசகஸ்தானில் வந்திறங்கிய இந்த 03 வீரர்களையும், அந்நாட்டு தலைவர் நர்சுல்தான் வரவேற்றார்.
விண்வெளி நிலையத்தில் அதிக காலம் தரித்திருந்தவர் என்கிற சாதனையை, இதற்கு முன்பு ரஷ்யாவைச் சேர்ந்த சேஜி கிறிக்கலிவ் 2005 இல் படைத்திருந்தார். இவர், 06 தடவை சென்று வந்ததன் மூலம், மொத்தமாக 803 நாள் 09 மணித்தியாலம் 41 நிமிடங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தார்.


Comments



