மக்கள் காங்கிரஸ் விவகாரத்தில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக, ஹமீட் தொடர்ந்த வழக்கு வாபஸ்

🕔 October 16, 2018

டந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் கையெழுத்திடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதியளித்தமைக்கு எதிராக, கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

முன்னைய நாட்களில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உச்சநீதிமன்ற நீதியரசர்கள் அந்த வழக்கானது மேற்கொண்டு விசாரிக்கப்படுவது அவசியமற்றது எனக்கருதி, வழக்கை வாபஸ் பெறுவதற்கான உரிய அறிவுறுத்தல்களை பெற்றுக்கொண்டு, அதனை நிறைவுக்குக் கொண்டுவருமாறு மனுதாரின் சட்டத்தரணிகளை அறிவுறுத்தியிருந்தனர்.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அடுத்து, மனுதாரரான வை.எல்.எஸ்.ஹமீதின் சட்டத்தரணிகள் நேற்று திங்கட்கிழமை வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

இந்த வழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியான அலி சப்ரியும், கட்சித் தலைவர் மற்றும் தவிசாளர் சார்பில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும், செயலாளர் சார்பில் சட்டத்தரணி ருஷ்தி ஹபீபும் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

(அ.இ.ம.காங்கிரசின் ஊடகப் பிரிவு)  

Comments

புதிது பேஸ்புக் பக்கம்