கோட்டாவின் பாதுகாப்பு: நாளொன்றுக்கு அரசாங்கம் 35 லட்சம் ரூபா செலவிடுகிறது

🕔 September 28, 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மட்டும், நாளொன்றுக்கு 35 லட்சம்  ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக சட்டம் ஒழுங்கு  பிரதி  அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம் சிறிகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழம இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துக்கு அரசாங்கம்  பாதுகாப்பு வழங்கவில்லை என்று  பொது  எதிரணியினர் கூறுவதில் உண்மையில்லை. கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக  விசேட அதிரடி படையினர்  42 பேரும் , 28  ராணுவத்தினருமென மொத்தமாக 70 பேர்  கடமையில் உள்ளனர்.

முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு 06 அதிரடி படையினரும், 14 பொலிஸாருமே பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். கோட்டாவின் விடயத்தில் அரசாங்கம் முழுமையான பாதுகாப்பினையே வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

Comments