கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் வளர்த்தவருக்கு தண்டம்

🕔 September 24, 2018

– க. கிஷாந்தன் –

ஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் சட்டவிரோதமாக வளர்த்து வந்த சந்தேக நபருக்கு ஹட்டன் நீதவான் 3000 ரூபாயை தண்டமாக விதித்துத் தீர்ப்பளித்தார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்திலுள்ள கிங்கோரா பிரிவிலிலுள்ள வீட்டு வளவிலேயே இவ்வாறு கஞ்சா செடி வளர்க்கப்பட்டது.

மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இவ்வாறு கஞ்சா செடிகள் வளர்ப்பதை பொலிஸார் கண்டுள்ளனர். இதன்போது இரண்டு கஞ்சா செடிகளை பொலிஸார் மீட்டனர்.

இவர் தனது வீட்டு முற்றத்தில் இச்செடிகளை வளர்த்து வந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கஞ்சா செடிகளை சமர்ப்பித்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்த பொழுது, குற்றவாளிக்கு நீதவான் 3000 ரூபாவை தண்டமாக விதித்து தீர்ப்பளித்தார்.

Comments