அமைச்சர் சம்பிக்கவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

🕔 September 10, 2015

Champika ranawaka - 01மைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பைச் சேர்ந்த மூன்று சட்டத்தரணிகள் இணைந்து இந்த வழக்கினை தாக்கல் செய்யவுள்ளனர்.

கடந்த 26 ஜுலை 2015 அன்று, தொலைக்காட்சி அலைவரியொன்றில் சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்துக்கள் ஒளிபரப்பாகியிருந்தன.

இதில், உச்ச நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் – இறுமாப்புடனும்,  அலட்சிமாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை அடிப்படையாக வைத்தே, அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்