பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தவர்கள் கைது
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியொருவருக்கு லஞ்சம் வழங்க முயற்சித்த இருவரை, நேற்று செவ்வாய்கிழமை லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.
சபுகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுப்பதற்கு முயற்சித்த போதே, மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கொலைச் சந்தேக நபரொருவரை பிணையில் விடுவிப்பதற்கு உதவுமாறு, சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மேற்படி இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்காக, 15 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இவ்விடயம் தொடர்பில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, நேற்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்ற வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வைத்து, குறித்த பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் வழங்க முற்பட்டபோது, மேற்படி இருவரையும் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.